Monday, October 19, 2009

தனி மரம்

ஒரு மிகப் பெரிய சமவெளியின் நடுவே நிற்கும் ஒரு தனிமரத்தை நீங்கள் கண்டு இருக்கிறீர்களா? அதைப் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

எனக்கு யாருமே தேவை இல்லை. நான் அனைவரையும் வெறுக்கிறேன். நான் தனிமையையே விரும்புகிறேன். நான் தனியாகவே இருக்க விரும்புகிறேன் என்று அம்மரம் சொல்வது போல் தோன்றுமா?

அல்லது எந்த ஒரு மரமும் வளர முடியாத இடத்தில் தனியாக வளர்ந்து கோலோட்ச்சி நிற்கும் அதன் தைரியம் உங்களுக்குத் தெரியுமா? பார், என்னைப் பார்! யாருமே வளர முடியாத இடத்தில் வளர்ந்து என்னுடைய ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் என் திறமையைப் பார் என்று சொல்வது போலத் தோன்றுமா?

சில நேரங்களில் நானும் ஒரு தனிமரம் போலவே உணர்கிறேன். ஆனால் மேற்கூறியவற்றில் நான் எவ்வகையைச் சேர்த்தி என்று தெரியவில்லை !

No comments:

Post a Comment